Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்., கட்சி கெட்டப்பெயரை சுமந்து அல்லல்படும் இந்நேரத்தில் ராகுலை உயரிய பொறுப்புக்கு கொண்டு வர காங்., திட்டமிட்டுள்ளது. இதன்படி உயர் பொறுப்புக்கு வரும் முடிவை எடுத்து விட்டேன் என்றும், உரிய நேரத்தில் காங்., கட்சி தலைமை முடிவை எடுக்கும் என்றும் இன்றயை பேட்டியில் ராகுல் சுருக்கென 2 வரி பதிலில் தெரிவித்தார்.

ஊழல், விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி என்ற பல பிரச்னைகளால் பிரதமர் பெயர் பெருமளவுக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்., கட்சியில் மாற்றம் வருமா ? பிரதமர் பதவிக்கு புதிய முகம் அமர்த்தப்படுமாக என்ற பேச்சு தற்போது எழுந்திருக்கிறது. இதனையடுத்து ராகுல் நோக்கி அரசியல் பார்வை திரும்பியுள்ளது. மேலும் ராகுலை உயரிய பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என காங்., மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில் இன்று ராகுல் அளித்த பேட்டியில்; நான் எதிர்காலத்தை திட்டமிட்டு விட்டேன். அரசிலோ அல்லது கட்சியிலோ உயர் பொறுப்புக்கு வருவது குறித்தும் முடிவு எடுத்து விட்டேன். இருப்பினும் என்ன மாதிரியான பொறுப்பு என்பதை காங்., மூத்த தலைவர்கள் சரியான நேரத்தில் முடிவு எடுப்பார்கள். இவ்வாறு ராகுல் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மாற்றம் இருக்கும் என டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரப்போகிறார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com