Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அமைச்சரவையின் புதிய ரயில்வே துறை அமைச்சுப்பொறுப்பு, சி.பி.ஜோஷியிடம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை சபையில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முகுல்ராய் ரெயில்வே அமைச்சராக இருந்தார். கடந்த வாரம் அவர் பதவி விலகினார். இதையடுத்து ரெயில்வே இலாகாவை, மத்திய போக்குவரத்து மந்திரி சி.பி. ஜோஷியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கி பிரதமர் மன்மோகன்சிங் உத்தர விட்டார். திங்கட்கிழமை காலை சி.பி.ஜோஷி டெல்லியில் உள்ள ரெயில்வே பவனுக்கு சென்று ரெயில்வே அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதன் முலம் 17 வருடங்களுக்கு பின், ரயில்வே துறையை மீண்டும் காங்கிரஸ் அமைச்சர் ஒருவரே பொறுப்பேற்றுள்ளார். ராஜஸ்தானின் பயில்வாரா தொகுது சட்டசபை உறுப்பினரான ஜோஷி தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி குறித்து கருத்து தெரிவிக்கையில், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து சேவைபுரிவேன் என்றார். பயணிகள் கட்டணம் உயர்வு யோசனை திரும்ப பெறப்பட்டால், ரயில்வே துறைக்கு ஏற்படும் மேலதிக செலவு பற்றி, நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இப்போது இத்துறைக்கு பொறுப்பேற்றுள்ளேன். முதலில் இதன் நடவடிக்கைகள் எனக்கு புரிய வேண்டும். சிறிது அவகாசம் கொடுங்கள் என்றார்.

0 Responses to 17 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் காங்கிரஸிடமே ரயில்வே துறை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com