பெட்ரோல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக பாரத் பெட்ரோலிய நிதிப் பிரிவு இயக்குனர் தெரிவித்துள்ளார். பெட்ரோல் விலை கடந்த ஜூன் மாதம் லிட்டருக்கு 7 ரூபாய் 80 பைசாவரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. பின்னர் 2 ரூபாய் வரை குறைக்கப் பட்டது. இப்போது மறுபடியும் பெட்ரோல் விலையை குறைப்பது பற்றி எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக பாரத் பெட்ரோலியத் துறை நிதி இயக்குனர் வரதராஜன் தெரிவித்து இருக்கிறார். அவர் இதுப்பற்றித் தெரிவித்து இருப்பதாவது, இப்போது கச்சா எண்ணெய் விலை டீப்பாய்க்கு 10 ஆயிரம் வரை குறைந்துள்ளது என்றும், மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் கொஞ்சம் உயர்ந்துள்ளது என்றும் கூறயுள்ளார். இதனால் பெட்ரோல் விலையைக் குறைப்பது பற்றி எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார். மத்திய அரசு சமீபத்தில் டீசல் விலையை உயர்த்தியது குறித்து, பல்வேறு தரப்பினரும் இன்றுவரை போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
0 Responses to பெட்ரோல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசனை