சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில், சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு விவகாரம் அரசு இதழிலும் வெளிவந்து விரைவில் அது நடைமுறைக்கு வர இருக்கும் இந்த நேரத்தில், உச்சநீதி மன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது நல வழக்கு ஒன்று நேற்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கை மூத்த வழக்கறிஞர் எம்.எஸ். சங்மா என்பவர் தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிகிறது. மனுதாரரின் அந்த மனுவில், சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு அனுமதி விவகாரத்தால் மூன்றரை கோடி வர்த்தகர்கள் பாதிக்கப் படுவார்கள் என்றும், சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவரிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. நாடாளுமன்றத்தின் மக்களவையில் இதுபற்றி விவாதிக்கப் படவில்லை. பிரதமர் தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்து இருக்கிறார். இதனால் சில்லறை வணிகர்கள் மற்றும் அவரது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும். அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு நியுயார்க்கில் அனுமதி கிடையாது. அப்படி இருக்கும் போது, இந்தியாவில் அவர்களுக்கு எதற்காக ரத்தினக் கம்பளம் விரிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிபிடப் பட்டுள்ளது. எனவே சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு அனுமதியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் இருக்கும் என்றும் தெரிகிறது.
சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல மனு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
23 September 2012
0 Responses to சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல மனு