மட்டக்களப்பு மாவட்டத்தில், களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறை நிலையத் தாக்குதலில் காவியமான லெப்.பரமதேவா, வீரவேங்கை ரவி ஆகியோரின் 28ம் ஆண்டு நினைவு நாளும், முல்லைக் கடலில் காவியமான லெப்.கேணல் அருணனின் 14ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.
22.09.1984 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது,
மட்டக்களப்பு மாவட்ட தாக்குதல் படைத் தளபதி லெப்டினன்ட் ராஜா (இராமலிங்கம் பரமதேவா - மட்டக்களப்பு), வீரவேங்கை ரவி (தம்பையா வாமதேவன் - மகிழடித்தீவு, மட்டக்களப்பு)ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவினர்.
22.09.1998 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதலில்,
லெப்.கேணல் அருணன் (அருணா)
(இராசேந்திரம் சசிகரன் - துன்னாலை, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
0 Responses to லெப். பரமதேவா - லெப்.கேணல் அருணன் ஆகியோரின் நினைவு நாள் இன்று