Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பீகார் மாநிலத்தின் பாட்னாவில் சாத் பூஜை கொண்டாட்டத்தின் போது பாலம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

வடமாநிலங்களில் மிக பிரபலமான சாத் பூஜைகள், நேற்று தலாட், கஞ்ச்காட் பகுதியில் உள்ள சூரியனார் கோவிலில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

பூஜையில் ஏராளமான பக்தர்கள கலந்து கொண்டதுடன், பூஜை முடித்து இப்பகுதியில் கங்கை ஆற்றின் மீது தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பாலத்தை கடந்து கொன்டிருந்தனர். அப்போது பாரம் தாங்காது, பாலம் திடீரென இடிந்து வீழ்ந்ததில் பலர் ஆற்றில் வீழ்ந்தனர். இதில், 17 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகியிருப்பதுடன் காயமடைந்த 40க்கு மேற்பட்டவர்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கள் 20 ஐ கடக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இவ்விபத்தை அடுத்து பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் நாளை மாலை, டதனது ஜனதா தால் யுனைட்டட் கட்சி உறுப்பினர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கவிருந்த இரவு உணவு விருந்தை இடைநிறுத்தியுள்ளார்.

குறித்த தற்காலிக பாலம் மூங்கில் மற்றும் மரப்பலைகளாலேயே கட்டப்பட்டிருந்ததாகவும், மக்கள் தமது பிரார்த்தனைகளை முடித்துக்கொன்டு பெருமளவில் இப்பாலத்தின் ஊடாக வெளியேற முயற்சித்ததால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதீஷ் குமார் ரூ.2 இலட்சம் நிவாரண உதவியாக அறிவித்துள்ளார்.

தீபாவளியை அடுத்து ஆறுநாட்கள் விழாவாக கொண்டாடப்படும் சாத் பண்டிகை சூரியனுக்கு நமஸ்காரம் செய்யும் பொருட்டு கொன்டாடப்படுவதாகவும். சுமார் 36 மணித்தியாலங்கள் தொடர்ந்து விரதமிருக்கும் பெண்கள் மற்றும் பின்னர் இறுதி பண்டிகை நாளில் பால், சீனி, வாழைப்பலம், கோதுமை மற்றும் தேங்காய் கொன்டு சூரியக்கடவுக்கு படைத்து தமது விரதத்தை முடித்துக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பட்னாவில் சாத் பூஜையின் போது ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com