டென்மார்க்கில் தேசத்தின் குயில்கள் 2012 எழுச்சி பாடல் போட்டியானது Ikast
நகரில் நடைபெற்றது.
பொதுச்சுடறேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானதனை தொடர்ந்து எமது தேசியக்கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின்பு பிரிகேடியர் சு.ப. தமிழச்செல்வன் உட்பட 5 வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டிநிகழ்வில் எல்லோரும் மிகவும் உணர்வுபூர்வமாக தாயக உணர்வுடன் பாடல்களை வழங்கியிருந்தார்கள், அதன்மூலம் அரங்கத்தில் நிறைந்திருந்த மக்களின் முகங்களில் தாயகத்தில் நிற்பது போன்ற உணர்வை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
தேசத்தின் இளங்குயில்கள் போட்டியாளர்களும் உற்சாகத்துடனும் தாயகவேட்கையுடன் தங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை எழச்சிப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். தேசத்தின் குயில்கள்(18 வயதுக்கு மேற்பட்டோர்) எழுச்சிப்பாடல்கள் மூலம் தாயக அவலங்களையும் மாவீரர்களின் தியாகங்களையும் தேசியத்தலைவரின் இலட்சியத்தையும் வெளிக்காட்டினார்கள்.
தேசத்தின் குயில்கள் எழுச்சிப்பாடல் போட்டியில் பங்கு பற்றிய அனைவரும் பாடல்களை மட்டும் போட்டியாகப் பாடவில்லை, தமிழீழ விடுதலையின் முக்கியத்துவம் மாவீரர்களின் இலட்சியம் மற்றும் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் அமையும் அதற்கு தமிழரின் ஒற்றுமையின் அவசியம் போன்ற விடயங்களையும் வெளிப்படுத்தினார்கள்.
டென்மார்க் தமிழீழ இசைக்குழு மிகவும் திறைமையாக எழுச்சிப்பாடல்களுக்கான இசையை வாசித்து பாடகர்களை உற்சாகப்படுத்தினார்கள். தேசத்தின் குயில்கள் 2012 ற்கு நடுவர்களாகக் கடமையாற்றியவர்கள் பிரித்தானியாவைச் சேர்ந்த பொன்னையா ஜெயஅழகி அருணகிரிநாதர் ஸ்ரீமதி சுதாமதி ஸ்ரீசற்குணம் தேசத்தின் குயில்கள் எழுச்சிப்பாடல் போட்டியில் பங்குகொண்ட டென்மார்க்கில் பிறந்த மழலைகள் மற்றும் இளையோர்களின் பாட்டுத்திறன் தமிழ்மொழியை உச்சரிக்கும் திறன் போன்ற விடயங்கள் நடுவர்களை வியக்கவைத்தது. அந்தவகையில் நடுவர்கள் பெற்றோர்களையும் தமிழ்பாட ஆசிரியர்களையும் பாராட்டினார்கள்.
தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:
1ம் இடம் சிறித்திக் சதீஸ்வரன்
2ம் இடம் ரஜிவன் விஜயராசா
3ம் இடம் ரஜிக்கா கஜேந்திரன்
தேசத்தின் இளங்குயில்கள் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:
1ம் இடம் வேணுகா குணசீலன்
2ம் இடம் அருண்ணியா இராஜசிங்கம்
3ம் இடம் திவாரகா உதயச்சந்திரன்
தேசத்தின் குயில்கள் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:
1ம் இடம் சுகன்யா ஜெயம்
2ம் இடம் ராகவி தங்கராஜா
3ம் இடம் குருசுமுத்து அமிர்தநாதன்
தேசத்தின் குயில்கள் 2012 எழுச்சிப்பாடல்போட்டி நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடன் நிறைவு பெற்றது.

0 Responses to டென்மார்க்கில் நடைபெற்ற தேசத்தின் குயில்கள் 2012 எழுச்சி பாடல் போட்டி (படங்கள் இணைப்பு)