Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

பராக் ஒபாமா வெற்றிபெற்றமையால், இலங்கைக்கு அமெரிக்காகொடுத்து வரும் அழுத்தங்கள் மேலும் வலுவானதாக அமையுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு முற்போக்கு வாதி. பன்முகத்தன்மை கொண்டவர். அமெரிக்க மக்களும் பன்முக சமுதாயத்தைக் கொண்டவர்களாக இருப்பதால்தான் மீண்டும் அவரைத் தெரிவு செய்துள்ளனர்.

பராக் ஒபாமா தனது முதலாவது பதவிக்காலத்தின் போது இலங்கையைப் பொறுத்தவரை மனித உரிமைகள் விடயத்திலும், அனைத்து மக்களும் சுயமரியாதையுடன்இ நியாயபூர்வமாக வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் மிகத் தெளிவாக இருந்து வந்தார்.

ஜெனிவாவின் மனித உரிமைகள் தொடர்பான அமர்வில் இலங்கை குறித்து விசேட பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து அவரது தலைமையின் கீழ்தான் ஆக்கபூர்வமான விடயங்கள் இடம்பெற்றன. இதுபோன்ற கருமங்கள் தொடருமென்று நாம் நம்புகின்றோம்.

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படவும், மக்கள் சுபீட்சத்துடன் வாழவும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு எப்போதும் உதவுமென்று நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு த.தே.கூட்டமைப்பு வாழ்த்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com