Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 22.6 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான அறிவிப்பை தென்கிழக்கு ஆசிய மாநட்டில் வைத்து ஜப்பான் பிரதமர் யாஷிஹிகோ நோடா தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க வந்த இரு தலைவர்களும் தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த ஒப்பந்தத்திற்கு இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தல் மற்றும் பிரத்தியேக சரக்கு ரயில் பாதையை அமைப்பதற்காக இந்நிதியுதவி செலவிடப்படவுள்ளது.  இதேவேளை, இந்தியா - ஜப்பான் இடையே அரியவகை கனிமங்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் இரு நாடுகளிலும் பணிபுரியும் இரு நாட்டை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு ஆகியன தொடர்பிலும் இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதன் போது, உள்கட்டமைப்பு திட்டங்களில் ஜப்பான் நிறுவனங்களுக்கே இந்தியா முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

0 Responses to இந்தியாவுக்கு 22.6 பில்லியன் டாலர் கடனுதவி வழங்குகிறது ஜப்பான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com