Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்கப் படையினரின் செயற்திட்டத்தில் (Mission) பங்கு பற்றிய 7 கப்பற் படையைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு சமீபத்தில் அமெரிக்க இராணுவம் கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளதுடன் இரண்டு மாத சம்பளத்துக்கும் தடை விதித்து நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் இவர்கள் பின்லேடன் வேட்டை தொடர்பான வீடியோ கேம் ஒன்றிட்கு பின்லேடன் ரெய்டு பற்றிய ரகசியத் தகவல்களைக் கசிய விட்டதுடன் இந்த வீடியோ கேம் வடிவமைப்புக்கான சம்பளம் வாங்கும் ஆலோசகர்களாகக் கடமையாற்றியதும் ஆகும்.

இந்த வீடியோ கேம் பின்லேடன் வேட்டை பற்றி வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும் அதற்கு ஒப்பான யதார்த்தமான இராணுவ நடவடிகைகளை (Missions) கொண்டுள்ளது. 'Electronics Arts' எனும் நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்துக்குத் தகவல் கசிய விட்டவர்களில் பின்லேடன் வேட்டையில் பங்கேற்ற இரு விசேட மூத்த ஆப்பரேட்டர்களும், 5 ஆப்பரேட்டர்களும் அடங்குவர்.

இவர்களுக்கு இராணுவ கட்டளைகளை மீறிய குற்றம், தமது அதிகாரங்களை சட்ட விரோதமாகக் கையாண்டமை, கடமையில் இருந்து தவறியமை, மற்றும் இறையாண்மையுடைய ஆவணங்களை வெளியிட்டமை ஆகிய குற்றங்களின் கீழ் தண்டனை அளிக்கப் பட்டுள்ளது.

0 Responses to வீடியோ கேம் ஒன்றுக்கு பின்லேடனை பிடித்தது தொடர்பாக தகவல் சொன்னதால் தண்டனை!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com