Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும்,  முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு திமுவுக்கு தலைவர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

கடந்த ஒருவாரமாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம், இன்று காலை சென்னையில் காலமானார்.

அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக தலைவர் கருணாநிதி, அவரது உடலை பார்த்ததும், கண்ணீர் விட்டு கதறி அழுத்தார். மிகவும் உணர்ச்சிவசமாக காணப்பட்டதுடன் திமுக தூண் விழுந்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தன் உயிருக்கு உயிரான கண்மணி மாறன் மறைந்த இதே நாளில், ஆறுமுகத்தின் மறைவு செய்தியும் தமக்கு கிடைக்கப்பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது. தொண்டருக்கு தொண்டருக்காக இருந்த அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து அலைக்கழித்தது. ஒரு தளபதியை இழந்துவிட்டேன். எனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை என்றார்.

குஷ்பு, தயாநிதிமாறன் ஆகியோரும்  வீரபாண்டி ஆறுமுகத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

0 Responses to வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவு : திமுக தலைவர் கருணாநிதி கண்ணீருடன் அஞ்சலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com