Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி அரசு திரும்ப ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க கோரி தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றில், இன்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்குவதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, டெல்லி அரசு திரும்ப ஒப்படைக்கும் மின்சாரத்தையாவது தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்த போதே மத்திய அரசு தனது மறுப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லி வழங்கும் உபரி மின்சாரத்தை மேலும் சில மாநிலங்களும் கேட்கின்றன. தமிழகத்திற்கு இம்மின்சாரத்தை அனுப்புவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனை கொண்டு செல்லும் திறன் தென்மண்டல கிரெடிட்டுக்கு இல்லை என மத்திய அரசு சார்பில் வாதாடப்பட்டது.

இந்நிலையில் மத்திய மின்சார ஆணையகம் இவ்விவகாரத்தில் விரிவாக பதில் அளிக்க வேண்டுமென கோரி வழக்கை 29ம் திகதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

0 Responses to உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன : மத்திய அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com