Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூடங்குளம் போன்ற தொழில் வளர்ச்சி சாதனங்களுக்கு திமுக எதிரானது அல்ல, என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திமுக ஆதரிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டது என்பது போல மத்திய அமைச்சர் நாராயணசாமி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருப்பதாகவும், அதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே கருணாநிதி இவ்வாறு கருத்து தெரிவித்து இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் இதுபற்றிப் பேசியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, "அதிமுக கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதரிப்பது போலவும்,  திமுக கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரானது என்பது போல கருத்திலும் பேசியுள்ளார் நாராயண சாமி. கூடங்குளம் போன்ற தொழில் வளர்ச்சி சாதனங்களுக்கு திமுக எப்போதுமே எதிரானது அல்ல.

கூடங்குளம் போராட்ட மக்களுக்கு முன்னர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்ததும், தலைமை செயலகத்துக்கு ஜெயலலிதா போராட்டக் காரர்களை வரவழைத்து பேசியதும் மத்திய அமைச்சர் நாராயண சாமிக்குத் தெரியாதா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கருணாநிதி.

0 Responses to கூடங்குளம் போன்ற தொழில் வளர்ச்சி சாதனங்களுக்கு எதிரானது அல்ல திமுக: கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com