சிங்களப் பேரினவாத இனமொன்றினால் அதன் அரச இயந்திரத்தாலும் சிறுபான்மைத் தமிழினம் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத தெரிவாய் ஆயுதத்தைக் கொண்டு அழிப்பவனை அழிக்கும் எமது விடுதலைப்போராட்டம் தொடங்கியது. படைவளம், படைப்பலம் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராய் ஒரு சில உணர்வுள்ள தமிழ் இளையோரால் தொடங்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம், ஆட்பல ஆயுதப்பல ஒப்பீடுகளுக்கு அப்பால் எந்தவகைத் தியாகத்தையும் செய்யத்துணிந்தெழுந்த போராளிகளின் மனபலம் தனிப்பெரும் சக்தியாகவே தமிழரைக் காத்து நின்றது. அந்தக் காப்பு சகத்திகளின் சாட்சியாக 40000 இற்கு அதிக மாவீரர்களை இந்த மண்ணிலே விதைத்து இன்று உறுதிபெற்று நிற்கின்றோம்.
ஒவ்வொரு மாவீரரின் உயிர்த்தியாகமும் ஒரே இலட்சியத்தைக் கொண்டதெனினும் அவர்களின் தியாகவடிவங்கள் தனித்துவமானவை."எனது மரணத்தின் பின்னால் இந்த மண் மகிழ்வான வாழ்வைப்பெறும் என்ற நம்பிக்கையில் போகிறேன்" என சொல்லிப்போன கரும்புலி மாவீரர்களினதும் "எனது வித்துடலைத் தாண்டித்தான் எதிரி எம் மண்ணை ஆக்கிரமிக்கமுடியும்" என இறுதிவரை உறுதியுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரர்களினதும், தாய் மண்ணின் இரகசியத்தைக் காப்பதற்காய் கடலிலும் தரையிலுமாக தம்மைத்தாமே மாய்த்துக்கொண்ட மாவீரர்களும் என மாவீரர்களின் தியாகப்பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. அந்த அத்தனை மாவீரர்களினதும் வீரச்சாவு நிகழ்ந்த நாட்களும் வேறுபட்டவை. எனினும் ஓரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீரர்களை நினைவுகொள்ள கார்த்திகை 27ஐ தெரிவுசெய்த சம்பவமும் எமது விடுதலைப்போராட்டத்தில் தனிப்பதிவாய் அமைந்தது.ஒரு சில போராளிகளாய் உருவாகி பரந்திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி போராட்டப் பாதையை செப்பனிட்ட காலமது. அந்தக் காலப்பகுதியில் தான் விடுதலைப்போரின் முதல் வித்தொன்று 1982.11.27 அன்று லெப்.சங்கராக வீழ்ந்தது.
தொடரும் ...
0 Responses to உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் வாரம் - இரண்டாம் நாள் இன்று