Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வாழ்ந்தாலும் இறந்தாலும் அது சிரியாவில் தான் என  சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் அதிரடியாகக் கூறியுள்ளார்.

மேலும் தன்னை வெளியேற்றுவதற்கும் தனது இராணுவத்துக்கு எதிராகப் போராடவும் முயற்சி செய்யும் எந்த வெளிநாட்டு சக்தியும்,  சிரியா மற்றும் மத்திய கிழக்கில் பாரிய அழிவை சந்திக்க நேரிடும் எனவும் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வன்முறையில் ஈடுபடுத்திய குற்றத்துக்காக சர்வதேச நீதி விசாரணையை அஸ்ஸாத் சந்திக்க வேண்டும் எனவும் இதன் பொருட்டு அவரைப் பாதுகாப்பாக நாட்டில் இருந்து அகற்றத் தேவையான ஏற்பாடுகளை செய்வதாகவும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியிருந்தார். இதன் மூலம் சிரிய வன்முறையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என பிரிட்டன் அரசு எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் தான் அஸ்ஸாத்தின் இந்த அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை எதிர்த்து அஸாத் கருத்துரைக்கையில் தான் மற்றவர்கள் ஆட்டும் கைப்பாவையல்ல என்றார்.  கடந்த வருடம் மார்ச் முதல் சுமார் 20 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்றும் வரும் சிரிய வன்முறையில் ஆயிரக் கணக்கில் பொது மக்கள் கொல்லப் பட்டு வருகின்றனர். இதனைத் தடுத்து மக்கள் ஏற்கும் தீர்வொன்றை கொண்டு வர ஐ.நா மற்றும் அரேபிய சமூகம் உட்பட மேலைத்தேய நாடுகள் பலத்த முயற்சி செய்து வருகின்றன. எனினும் அவை ஒவ்வொன்றும் பலனில்லாமல் போவதும் மனிதக் கொலைகள் தினமும் 100 கணக்கில் நிகழ்வதும் இன்னமும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வாழ்ந்தாலும் இறந்தாலும் அது சிரியாவில் தான்: அதிபர் பஷார் அல் அஸாத் சபதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com