Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று வியாழக்கிழமை இரவு தளபதி பரிதி பரிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வாசலில் வைத்துத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச் சாவடைந்துள்ளார். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார் என மக்கள் கொதிநிலையில் உள்ளனர்.

கடந்த வருடமும் ஒக்டோபர் இறுதிப் பகுதியான HALLOWEEN காலப்பகுதியிலேயே பரிதி அவர்கள் இதே இடத்தில் வைத்து இனந்தெரியாதோரின் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 1996ம் ஆண்டிலும் லெப்.கேணல் நாதன் அவர்களும் கப்படன் கஜன் அவர்களும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

சிறீலங்காப் புலனாய்வுத்துறையினரும் பாதுகாப்புத்துறைச் செயலாளரும் புலம் பெயர் தேசத்திலுள்ள எழுச்சிகளை எவ்விலை கொடுத்தாயினும் தடுக்கும் முனைப்பில் முழுமூச்சுடன் இறங்கியுள்ளனர். முதன்மையாக மாவீரர் நாள் எழுச்சிகளைத் தமிழீழ மண்ணிலே தடுத்தாலும் புலம் பெயர் தேசங்களில் அது எழுச்சிகொள்வது சர்வதேச மட்டங்களில் சிறீலங்கா அரசைப் பாரிய சிக்கல்களில் மாட்டுகின்றது.

காவற்துறையின் தகவலை மேற்கோள்காட்டி Le Parisien பத்திரிகை தனது இணையத்தளத்தில் பரிதி அவர்களின் படுகொலையைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. இச் செய்தியின்படி முகம் மூடிய தொப்பி அணிந்த இருவர் உந்துருளியில் வந்து இவரைச்சுட்டுக் கொன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவர் மீது மூன்று தப்பாக்கிச் சூடுகள் சுடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 Responses to தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் தளபதி பரிதி பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com