மகிந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கட்டப்பட்டிருந்த
பதாகைகள் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு நாவற்குடா,
கல்லடி பகுதிகளில் பிரதான வீதியில் மகிந்தாவின் உருவப்படம் தாங்கிய
பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. நேற்று சனிக்கிழமை அவை சேதமாக்கப்பட்டன.
மகிந்தாவின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு கல்லடியில் இன்று
இடம்பெறவுள்ள நிகழ்வொன்றுக்காக இந்தப் பதாகைகள் கட்டப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள நாவற்குடா மற்றும் கல்லடி ஆகிய பகுதிகளில் இவை கட்டப்பட்டிருந்தன.
0 Responses to மகிந்தாவின் உருவப்பட பதாகை கிழிக்கப்பட்டது