நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் புலான்புலி மற்றும் அலகார்மோ நகரப் புற எல்லையில் ஏற்கனவே பிடிபட்ட தனது தலைவர்கள் சிலரை விடுவிக்கவென போகோ ஹராம் மேற்கொண்ட முற்றுகைப் போரில் நைஜீரியப் படைகளும் தீவிரவாதிகளும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இந்த மோசமான துப்பாக்கிச் சூட்டு சண்டையில் 40 போக்கோ ஹராம் போராளிகள் என்கவுன்டர் முறையில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
மேலும் 4 இராணுவத்தினர் இந்த ஆப்பரஷேனில் பலியானதாகவும் 9 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை பாதுகாப்புத் துறை இயக்குனர் (DDI) மேஜர் ஜெனரல் கிறிஸ் ஒலுக்கொலாடே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இத்தாக்குதலில் தீவிரவாதிகளிடம் இருந்து 16 ரைஃபிள்களும் கலிபர், IED வெடிகுண்டு சாதனங்கள், சிம் கார்டுகள் மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகள் ஆகியன மீட்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தனது நண்பர்களுக்காக மருந்து வாங்க முற்பட்ட போராளி மருத்துவர் ஒருவரும் உணவு வாங்க முற்பட்ட இரு தீவிரவாதிகளும் இராணுவடத்தினரால் இந்த மோதல் நிகழ முன்னர் கைது செய்யப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
புலான்புலி புறநகர்ப் பகுதி அலகார்மோ மற்றும் சாம்பிஸா வனத்துக்கு இடையே அமைந்துள்ளதுடன் இப்பகுதியில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் சமீப காலமாக தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயன்று வந்துள்ளனர். இதேவேளை நைஜீரியாவில் 11 நாட்களுக்கு முன்னர் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள கிராமத்துப் பள்ளி ஒன்றில் இருந்து 200 இற்கும் அதிகமான மாணவிகள் போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டிருந்ததுடன் இதில் 187 மாணவிகளை இவர்கள் இன்னும் தமது கட்டுப்பாட்டில் மறைத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் கடத்தப் பட்ட மாணவிகளின் பெற்றோர் அவர்களை மீட்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளதுடன் அரசுடன் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

0 Responses to நைஜீரியாவில் தீவிரமான மோதலில் 40 போக்கோ ஹராம் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை