நெடியவன் என்று அறியப்படும் பேரின்பநாயகம் சிவபரன் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் என்று குறிப்பிட்டு இலங்கை அரசாங்கம், சர்வதேச பொலிஸினூடு விடுத்துள்ள பிடியாணை தொடர்பில் நோர்வே அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
பேரின்பநாயகம் சிவபரன் நோர்வேயின் ஒஸ்லோவில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், அவர் உள்ளிட்ட 40 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவர்களை கைது செய்யக் கோரும் பிடியாணையை இலங்கை அரசாங்கம், சர்வதேசப் பொலிஸினூடு (இன்டர்போல்) அண்மையில் விடுத்தது.
இந்த விடயத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலேயே நோர்வே வெளிவிவகார அமைச்சு தீவிர யோசனையில் இருப்பதாக 'தி லோக்கல்' எனும் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தில் புலம்பெயர்தோரிடையே தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக பேரின்பநாயகம் சிவபரனை, நோர்வை பொலிஸார் 2011ஆம் ஆண்டு கைது செய்து சில நாட்கள் தடுத்து வைத்திருந்த பின்னர் விடுவித்திருந்தனர்.

0 Responses to நெடியவனுக்கு எதிரான சர்வதேச பிடியாணை தொடர்பில் நோர்வே அவதானம்!