Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அமைச்சர்கள் தங்களது 100 நாள் திட்டத்தை வருகிற 6ம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தின் போது, முதல் மக்களவைக் கூட்டத் தொடரில் மத்திய அமைச்சர்கள் தங்களது 100 நாள் செயல்பாடுகளை அறிவிப்பதற்கானத்  திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் உரை இடம்பெற்றப் பின்னர் மத்திய அமைச்சர்கள் தங்களது 100 நாள் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பது மோடியின் நிலைப்பாடு என்று தெரிய வருகிறது.

அதன் படி மத்திய அமைச்சர்கள் தங்களது 100 நாள் திட்டச் செயல்பாடுகளை முன்னமேயே தயாரித்திருக்க வேண்டும் என்பது மோடியின் உத்தரவு என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றவுடன் 10 அம்சத் திட்டங்களை உள்ளடக்கி அறிக்கையை வெளியிட்டது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to மத்திய அமைச்சர்கள் தங்களது 100 நாள் திட்டத்தை 6ம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும்!: பிரதமர் மோடி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com