Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளியுறவுக் கொள்கையில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மீனவர்கள் கோரிக்கையில் பாஜக புதிதாக ஒன்றும் நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், வெளியுறவுக்கொள்கையில் பாஜக காங்கிரஸ் இடையே எந்தவித வேறுபாடும் இல்லை என்றும், இரண்டு கட்சிகளும் ஒரே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசன், தமிழக மீனவர்களிடமும் குறைப்பாடு இருக்கிறது என்றும், மீனவர்கள் பிரச்சனை என்பது மிகவும் ஆழமானது, அவற்றுக்கு சுமுகத் தேர்வு காண்பது என்பது ஆழமான ஆலோசனையின் பேரிலேயே கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இரட்டை மடிவலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று இலங்கை மீனவர்கள் கோரிக்கை வைத்து வருவதையும் ஜிகே.வாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to வெளியுறவுக் கொள்கையில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை!:திருமாவளவன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com