Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள், முல்லைப்பெரியாறு மற்றும் காவிரி நதி நீர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

அத்தோடு, தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கிய மனுவொன்றையும் தமிழக முதலமைச்சர், பிரதமரிடம் கையளித்துள்ளார். இதனிடையே இன்றை சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்ததாக புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்னர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், மோடியைச் சந்தித்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

0 Responses to மோடி- ஜெயலலிதா சந்திப்பு; தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி பேச்சு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com