இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் குழு விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரியுள்ள நிலையில், அதுதொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை தான் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலனறுவை மெதிரிகிரியவில் பாடசாலை நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியுடன் கட்டியெழுப்பி வரும் இந்தத் தருணத்திலேயே, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாம் போர்க்குற்றங்களைச் செய்ததாகக் கூறி குப்பைகளை தோண்ட சிலர் முயற்சிக்கின்றனர். இது பற்றிய தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை பாராளுமன்றத்துக்கு வழங்க உள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை மீதான ஐ.நா. விசாரணை; இறுதி முடிவை பாராளுமன்றம் எடுக்கும்: மஹிந்த ராஜபக்ஷ