Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த 29 இந்திய மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இலங்கையின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவே இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கான பணிப்புரையை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்தியாவின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களையும், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையிலேயே, அவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி பணித்துள்ளார்.

0 Responses to தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மஹிந்த பணிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com