Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசு மருத்துவமனைகள் உட்பட மாநிலம் முழுவதும் மேலும் 360 அம்மா உணவகங்களைத் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 15 அம்மா உணவகங்களை திறந்து வைத்தபோது இத்திட்டம் மிகவும் வெற்றியடைந்து, மேலும் திட்டத்தை விரிவுப்படுத்தி சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் திறந்து வைக்கப்பட்டது. இப்போது மலிவு விலையில் தரமான உணவினை ஏழை, எளிய மக்கள் உண்டு மகிழ, மாநிலத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகளில் என்று மேலும் புதிதாக 360 அம்மா உணவகங்களைத் திறக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்த மலிவு விலை உணவகத் திட்டத்துக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்தோடு, அந்த மாநிலங்களும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனைப்புக் கொண்டுள்ளனர்.

0 Responses to அரசு மருத்துவமனைகள் உட்பட மாநிலம் முழுவதும் புதிதாக 360 அம்மா உணவகங்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com