குறித்த விசேட சட்டமூலத்திற்கு அமைச்சரவை மே மாதம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், விரைவில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய சட்டமூலத்தினூடாக, 1983ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காணிகளை இழந்த மற்றும் தமது காணிகளுக்கான உரிமையை நிரூபிக்க சட்ட உதவியை நாட முடியாத வடக்கு, கிழக்கு பிரதேச மக்களுக்கு நன்மை கிடைக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்து மோதல்கள் காரணமாக தமது சொத்துக்களை கைவிட்டு வேறு இடங்களில் குடியேறிய நபர்கள் தமது உரிமைகளை மீளப் பெறுவதற்கு இந்த சட்டமூலத்தினூடாக 12 மாதகால அவகாசம் வழங்கப்பட உள்ளது. குறித்த காலப்பகுதியினுள் இவர்களுடைய சொத்துக்களை வேறு நபர்கள் அனுபவித்துக்கொண்டிருப்பதால், தமது சொத்துக்களை மீளப் பெறுவதற்காக வழக்கு தொடரும் உரிமை புதிய சட்டத்தினூடாக இவர்களுக்கு கிடைக்கும்.
உரிமையாளர்களின் காணிகளில் வேறு நபர்கள் 10 வருடங்களுக்கு மேல் குடியிருந்தால், அதனால் முதலாவது உரிமையாளருக்கு ஏற்படும் பாதிப்பு இந்த சட்டத்தினூடாக நீக்கப்படுவதாகவும், மோதல்களினால் காணி இழந்தவர்கள் இறந்திருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு புதிய சட்டத்தினூடாக காணிக்கு உரிமை கோரவும் அவகாசம் வழங்கப்படுகிறது.
0 Responses to மோதல் காலங்களில் காணிகளை இழந்தோர் அதனை மீளப்பெறுவதற்கு புதிய சட்டம்: ரவூப் ஹக்கீம்