நியூயோர்க் நகரத்தின் East Village பகுதியில் உள்ள 3 கட்டடங்களில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் 3 கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகியுள்ளதுடன் இன்னும் 4 கட்டடங்கள் தீப்பற்றி சேதமடைந்துள்ளன.
இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் பலியாகவில்லை என்ற போதும் 20 பேர் படுகாயம் அடைந்தும் இதில் 4 பேர் மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இருவரை அல்லது 3 பேரைக் காணவில்லை என்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அருகிலுள்ள 11 கட்டடங்களில் இருந்து 140 இற்கும் அதிகமான யூனிட்களில் இருந்து மக்கள் வெளியேற்றப் பட்டிருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
குறித்த கட்டட விபத்துக்கு எரிவாயுக் குழாய்க் கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப் படும் போதும் இன்னமும் உறுதிப் படுத்தப் படவில்லை. எனினும் இப்பகுதியில் மீட்புப் பணி நிறைவு பெறும் வரை சுமார் 219 வாடிக்கையாளர்கள் மற்றும் 32 தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கான எரிவாயு விநியோகத்தை Con Ed நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் கூற்றுப் படி 83 இற்கும் அதிகமான வளர்ந்தோர்கள் மற்றும் ஓர் குழந்தை ஆகியோர் விபத்து நடந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்திருப்பதாகவும் வெடி விபத்தினால் ஏற்பட்ட தீ அருகிலுள்ள சில ஹோட்டல்களுக்கும் பரவி இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்விபத்தில் காணாமற் போன இருவரும் தீ பரவியதால் சேதமடைந்த சுஷி உணவகத்திற்கு வந்திருந்தார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நியூயோர்க்கில் 2014 ஆம் ஆண்டும் ஏற்கனவே எரிவாயுக் கசிவால் ஏற்பட்ட ஓர் கட்டட விபத்தில் ஹார்லெம் பகுதியில் 8 பேர் கொல்லப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் East Village கட்டட விபத்தில் சேதமடைந்த பாகங்களைத் துப்புரவு செய்ய குறைந்தது ஒரு கிழமை எடுக்கும் என தீயணைப்புப் பிரிவு கமிசனர் டனியெல் நிக்ரோ தெரிவித்துள்ளார். நியூயோர்க்கிலுள்ள East Village ஆனது அதிகளவு மாணவர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் வசிக்கும் அழகு சாதனக் கடைகள், உணவு விடுதிகள், நைட் கிளப்புக்களுடன் கூடிய மிகப் பிரசித்தமான பகுதிகளில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to நியூயோர்க் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவரைக் காணவில்லை!: 22 பேர் படுகாயம்