Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் இராஜதந்திர- வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முகமாக நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன அரசின் அழைப்பையேற்று நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கின்றார். இந்த விஜயத்தின் இரண்டாவது நாளான நேற்றே (வியாழக்கிழமை) இரண்டு நாடுகளுக்கும் இடையில் கல்வி, சுகாதாரம், சமூக, பொருளாதார அபிவிருத்தியுடன் தொடர்புள்ள ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங்கிற்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று காலை சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சீன வாணிப அமைச்சு மற்றும் இலங்கை சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சருக்குமிடையில் பொதுச் சுகாதார துறையை மேம்படுத்துவதற்கு விசேட நிதி உதவி வழங்குவது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கு முழுமையான சிறுநீரக ஆஸ்பத்திரியொன்று வழங்கவும் சிறுநீரக நோய் குறித்து பரிசோதனை செய்ய நவீன ஆய்வுகூடமொன்றை வழங்கவும் புதிய எம். ஆர். ஐ. ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

சீனா ஆய்வு அகடமி மற்றும் இலங்கை நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சிற்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் எதிர்காலத்தில் சிறுநீரக நோய் பரவியுள்ள பிரதேசங்களில் நோய் பரவுவது குறித்து விசேட ஆய்வு நடத்தவும் நிலத்தடி நீரை சுத்தப்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

சீன வாணிப அமைச்சிற்கும் இலங்கை நீதி அமைச்சிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் பிரகாரம் இலங்கை உச்சநீதிமன்ற கட்டிடத் தொகுதியை திருத்தியமைக்க தேவையான சாத்திய வள அறிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 2000 இளம் விஞ்ஞானிகளுக்கு சீனாவில் தொழில்நுட்ப பயிற்சி வழங்கவும் இலங்கையில் உயிரியல் மருத்துவ தொழில்நுட்ப கூடமொன்றை நிர்மாணிக்கவும் அரச அதிகாரிகளுக்கு தேவையான நிர்வாக முகாமைத்துவ பயிற்சி வழங்கவும் இதன்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

0 Responses to மைத்திரியின் சீன விஜயம்: நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com