Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேன மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலால், அவர் படுகாயடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவையில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. கோடரியொன்றினாலேயே அவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த பிரியந்த சிறிசேன பொலனறுவை வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்கான கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிரியந்தவை தாக்கினார் எனக் கூறப்படும் லக்மால் என்பவர் பொலனறுவை பக்கமுன பகுதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

0 Responses to மைத்திரியின் இளைய சகோதரர் மீது தாக்குதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com