Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி விபூசிகா பாலேந்திரனை, அவ்வில்லத்திலிருந்து விடுவித்து தாயிடம் ஒப்படைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு விபூசிகாவும், அவரது தாயார் ஜெயக்குமாரி பாலேந்திரனும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து விபூசிகா நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

ஜெயக்குமாரி பூஸா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும், சில நாட்களுக்கு முன்னர் ஜெயக்குமாரியை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

இந்த நிலையிலேயே, விபூசிகாவை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜெயக்குமாரி நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனாலும், பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் அறிக்கை சமர்பிக்காது, விபூசிகவை தாயுடன் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

ஆனாலும், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, ஜெயக்குமாரி மற்றும் விபூசிகா மீது தாம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் விலக்கிக் கொண்டனர். இதனையடுத்தே, தாயுடன் செல்வதற்கு விபூசிகாவை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

0 Responses to விபூசிகாவை தாயிடம் ஒப்படைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com