Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்படுகின்றது. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் அடிப்படை அற்றது என்று கூறியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதை அரசாங்கம் ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரணியல் ஊடக முக்கியஸ்தர்களை அலரிமாளிகையில் நேற்று வியாழக்கிழமை சந்தித்து உரையாடும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் மாதிரியை பின்பற்றுவீர்களா? என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர் “இந்த விடயத்தில் தென்னாபிரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாட்டை நாம் ஆராய்கிறோம். எதுவென்றாலும் அது இலங்கைக்கு ஏற்ப முன்னெடுக்கப்படும். எமது மக்கள், எமது கலாசாரம் இவை இரண்டையும் கருத்தில் கொண்டே நமது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இந்த நாட்டு மக்கள் வேறுபட்டு நிற்காது ஒன்றுபட வேண்டும் என்பது எமது இலக்கு. அந்த இலக்கை நல்லாட்சி அரசு அடையும்.” என்றுள்ளார்.

0 Responses to தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படுவதை ஊக்குவிப்போம்; உண்மையான நல்லிணக்கமே அரசின் இலக்கு: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com