Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏமன் நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டு இருக்கும் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வர இந்தியாவிலிருந்து இரண்டு கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே நடைப்பெற்ற போரில், கிளர்ச்சியாளர்கள் மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், ஏமன் நாட்டு அதிபர் வெளிநாட்டு தப்பிச் சென்று விட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு வேலைப் பார்ர்க்கும் இந்தியர்கள் மிகக் கவனமாக இருக்கும்படியும், இந்தியத் தூதரகத்தை அணுகி உடனடியாக இந்தியா திரும்ப முடிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய் ஷங்கர் நேற்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று விமானப் போக்குவரத்தை ஏமன் நாடு ரத்து செய்துள்ளதால், அருகில் இருக்கும் நாட்டுக்கு இந்தியர்கள் தங்களது பாஸ்போர்ட்களை, ஏமனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்துவிட்டு, சென்றுவிட வேண்டும் என்றும், அங்கிருந்து அவர்கள் இந்தியக் கப்பல் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் சுஷ்மா சுவராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

0 Responses to ஏமன் நாட்டிலிருந்து இந்தியர்களை அழைத்துவர இரண்டு கப்பல்கள்: சுஷ்மா சுவராஜ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com