Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆந்திர அதிரடிப்படை சுட்டுக்கொன்ற 20 தமிழர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க 2 புதிய குழுக்களை நியமித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 7ம் திகதி ஆந்திர அதிரடிப்படை 20 தமிழர்களை செம்மரம் கடத்தியவர்கள் என்று சுட்டுக் கொன்றுள்ளது.இதற்கு எதிராக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இவ்வழக்கை கவனித்து வருகிறது. இந்நிலையில் தேசிய மணித உரிமைகள் ஆணையம் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய 2 புதிய குழுக்களை நியமித்து உள்ளது.

இதில் ஒரு குழு சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் ஆய்வும், மற்றொரு குழு உயிரிழந்த 20 தமிழர்களின் சொந்த ஊரான திரு அண்ணாமலை, தருமபுரி ஆகிய ஊர்களுக்கு சென்று விசாரிக்கவும் உள்ளது என்று தெரிய வருகிறது. இந்தக் குழுவினரின் அறிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to இருபது தமிழர்களை சுட்டுக் கொன்ற வழக்கை விசாரிக்க இரண்டு குழு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com