Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மிகவும் கட்டுக் கோப்பான சட்ட திட்டங்கள் உடைய நாடான சவுதி அரேபியாவில் முதன் முறையாக நகராட்சித் தேர்தலில் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கும் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.

இதனால் இந்த வாரம் முதற்கொண்டு வாக்களிப்புக்குப் பதிவு செய்வதற்கான வசதியையும் இனிமேல் தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையையும் சவுதி பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் வருகின்ற டிசம்பர் 12 ஆம் திகதி சவுதியில் நடைபெறவுள்ள 3 ஆவது நகராட்சித் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்கவுள்ள பெண்கள் தமது பெயர் விபரங்களை கடந்த வாரம் முதற்கொண்டு மெக்கா மற்றும் மெதினாவில் பதிவு செய்து வருகின்றனர்.

சவுதி அரேபியாவின் இந்த சட்டத் தளர்த்துதலை பெண்கள் அமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்று பாராட்டியுள்ளனர். அண்மையில் காலமாகி இருந்த சவுதி மன்னரான அப்துல்லா எடுத்த முயற்சிகள் மற்றும் 2011 ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்ட சட்ட திட்டம் காரணமாக சவுதி அரசியலில் பெண்களும் பங்கேற்பதற்கான இந்த முதற் படியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெண்களுக்கான இந்த தேர்தல் உரிமை நகராட்சித் தேர்தலுடன் மாத்திரம் மட்டுப் படுத்தப் படாது அரச நிர்வாகத் தேர்தல்களுக்கும் விரிவு படுத்தப் பட வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரான அதாம் கூக்ளே தெரிவித்துள்ளார். சவுதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை உட்பட சில முக்கிய உரிமைகள் மத செல்வாக்கு செலுத்தும் சட்டங்களால் இன்னமும் மறுக்கப் பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சவுதி அரேபியாவில் முதன் முறையாகப் பெண்களுக்கும் வாக்குரிமை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com