சீனாவில் 2020ஆம் ஆண்டுக்குள் வறுமை ஒழிக்கப்படும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பிஜிங்கில் கடந்த இரண்டு நாட்களாக வறுமை ஒழிப்பு மாநாடு இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “வறுமை ஒழிப்பு என்பது நீண்ட நெடிய பயணம். வறுமையின் கோரப்பிடியிலிருந்து அனைவரையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் வறுமையில் வாடும் மக்கள் அனைவருக்கும் போதுமான உணவு, உடை, இருப்பிடம், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர சபதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.
சீன வறுமை ஆணையகத்தின் புள்ளி விவரங்களின்படி, அந்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் 60 கோடிக்கும் அதிகமானோர் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது, உலகளவில் வறுமையில் சிக்கியுள்ளவர்களில் 70 சதவீதமாகும். இன்னும், 7 கோடி பேர் ஆண்டு வருவாய் 2,300 யுவானுக்கும் (இலங்கைப் பெறுமதி அண்ணவளவாக 50,000 ரூபாய்) குறைவாகப் பெற்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

0 Responses to சீனாவில் 2020ஆம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு; ஜின்பிங் உறுதி!