Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தலித்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் தொடர்ந்தும் அசட்டை செய்து வருகின்றனர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்ட மோதை அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “காங்கிரஸ் கட்சி தலைமையிலான முந்தைய மத்திய அரசைப் போன்றே, பா.ஜ.க தலைமையிலான தற்போதைய மத்திய அரசும், பாபா சாகேப் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களுக்கு எதுவும் செய்யாமல், வெற்று அறிக்கைகளை விடுத்து வருகிறது.

அம்பேத்கரின் 125ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, அரசமைப்புச் சட்டம் குறித்து ஒருபுறம் விவாதம் நடத்திக் கொண்டே, மறுபுறத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஆகியோர் தலித்துகளையும், சிறுபான்மையின மக்களையும் இழிவுபடுத்தி வருகிறனர்.

தலித்துகளை நாய்களோடு ஒப்பிட்டதன் மூலம், மத்திய அமைச்சர் வி.கே.சிங், நாகரிகத்தின் வரம்பை மீறி விட்டார். எந்த அதிகார அமைப்பும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சாதியவாத, குறுகிய, மதவாத கண்ணோட்டம் கொண்டதாக இருக்கிறது. காங்கிரஸ் அரசைப் போல் அல்லாமல், பா.ஜ.க அரசு சாதாரண மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை நிலவியது. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தல் நேரத்தில், குஜராத் கலவரம் குறித்த பேட்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மோடி கருத்து தெரிவித்தபோதே அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.” என்றுள்ளது.

0 Responses to தலித்துக்களுக்கு எதிரான கருத்துக்களை மோடியும், அமித் ஷாவும் அசட்டை செய்கின்றனர்: மாயாவதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com