பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இராணுவ வீரர் ஒருவரை மேற்கு வங்க மாநிலம் நிலிகுரியில் வைத்து டில்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் மூலம், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கொன்றில் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் டில்லி பொலிஸ் இணை ஆணையாளர் தெரிவித்துள்ளதாவது, “இந்திய இராணுவ ரகசியங்களை ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்த்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இராணுவ வீரர் ஃபரீத் கானை, சிலிகுரியில் வைத்து டில்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உளவு பார்த்த குழுவில், ஃபரீத் கானுக்கு "அறுவை சிகிச்சை நிபுணர்' (சர்ஜன்) என்ற ரகசிய குறியீடு பயன்படுத்தப்பட்டது. கஃபைதுல்லா கான் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட குறுந்தகட்டில் ஃபரீத் கானுக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அவர் மீது அரசு இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர், இன்று திங்கள்கிழமை டில்லிக்கு கொண்டு வரப்படுவார்.” என்றுள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கில் கஃபைதுல்லா கான் என்பவர் கடந்த மாதம் 26ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பிறகு அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், அப்துல் ரஷீத் என்ற இராணுவ வீரர் உள்பட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப் பட்டனர்.

0 Responses to ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தில் இராணுவ வீரர் கைது!