ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்- IS (ISIS)) தீவிரவாதிகள் இஸ்லாம் மார்க்கத்துக்காக பேசவில்லை. அவர்கள் கொடூரமான கொலைகாரர்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். தீவிவாதிகள் மரணத்தின் அடையாளமாக இருக்கின்றார்கள். தீவிரவாதத்தை வேரறுப்பதில் நாம் வெற்றிகாண வேண்டுமானால், சந்தேகப்பட்டும், வெறுத்தும் ஒதுக்கித்தள்ளி விடாமல் முஸ்லிம் சமுதாயங்களை நமது வலிமையான கூட்டாளிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சமீபத்தில் வன்முறைச் சம்பவமொன்றில் 14 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, வெள்ளை மாளிகையிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியூடாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே பராக் ஒபாமா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தன்னுடைய உரையில் தெரிவித்துள்ளதாவது, “கலிபோர்னியாவில் நடைபெற்ற கோரச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தாக்குதலுக்கு கடல் கடந்த அல்லது உள்நாட்டு தீவிரவாத இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
ஆனால், அவர்கள் இருவரும் இஸ்லாமைப்பற்றிய தவறான புரிதலால், மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் மீது போர் தொடுக்க மததுவேஷம் என்ற இருண்ட பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள், பைப் குண்டுகள் ஆகியவற்றை ஏராளமாக சேமித்து அப்பாவி மக்களை கொல்லும் நோக்கத்தில் இந்த தீவிரவாத தாக்குதலை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
உள்நாட்டில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை கருத்தில் கொண்டு பிற மதத்தினரை ஒதுக்கி வைத்து, பாகுபாடு காட்டக் கூடாது. தீவிரவாதிகளின் இதுபோன்ற செயல்பாடுகளை அமெரிக்காவுக்கும் இஸ்லாம் மதத்துக்குமான போராக மாற்ற அமெரிக்க மக்கள் முயற்சிக்க கூடாது. இதைத்தான் ஐ.எஸ். தீவிரவதிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு நாம் பலியாகி விடக்கூடாது. ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமுக்காக பேசவில்லை. அவர்கள் கொடூரமானவர்கள், கொலைக்காரர்கள், மரணத்தின் அடையாளமாக இருப்பவர்கள். தீவிரவாதத்தை வேரறுப்பதில் நாம் வெற்றிகாண வேண்டுமானால், சந்தேகப்பட்டும், வெறுத்தும் ஒதுக்கித்தள்ளி விடாமல் முஸ்லிம் சமுதாயங்களை நமது வலிமையான கூட்டாளிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இஸ்லாம் மார்க்கத்துக்காக ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசவில்லை; அவர்கள் கொலைகாரர்கள்: பராக் ஒபாமா