Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டக்ளஸ் ஒரு கொலையாளி - சிறீதரன்

பதிந்தவர்: தம்பியன் 06 December 2015

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஒரு கொலையாளி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன், ஊடகவியலாளர்கள் அற்புதன், நிமலராஜன் உள்ளிட்ட பலரின் கொலைகளோடு டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொடர்பிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "நான் கிளிநொச்சியில் ஆசிரியராக- அதிபராக கடமையாற்றிய காலப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொடுத்தாகவும், அப்படிச் சேர்க்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு பணம் பெற்றேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா இந்தச் சபையில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விடயங்களை டக்ளஸ் தேவானந்தா நிரூபிப்பாராயின் எனது இந்த அரசியல் வாழ்விலிருந்து முற்றாக ஒதுங்கத் தயார் என அவருக்கு சவால் விடுக்கின்றேன். டக்ளஸ் தேவானந்தா ஒரு கொலையாளி. அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி. அந்த நாட்டுக்குக்கூட செல்ல முடியாதவர். அவரின் கட்சியைச் சேர்ந்த அற்புதன் மற்றும் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், ஊடகவியலாளர் நிமலராஜன் உள்ளிட்ட பலரின் படுகொலையுடன் டக்ளஸ் தேவானந்தா தொடர்புபட்டவர்.

வடக்கில் 3000இற்கும் மேற்பட்டோர் காணாமற்போகக் காரணமாக இருந்தவர். டக்ளஸ் தேவானந்தா என்ற கப்பல் இன்று மூழ்கிக்கொண்டிருக்கின்றது. அவரின் அநீதிகள், குற்றங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.” என்றுள்ளார்.

0 Responses to டக்ளஸ் ஒரு கொலையாளி - சிறீதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com