ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சியைத் தோற்றுவிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியை (மஹிந்த ஆதரவு அணி) பலப்படுத்தி புதிய வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பதே தமது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசியல் கட்சியை அமைப்பதை விட பொது வேலைத் திட்டத்தின் ஊடாக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்துச் செயற்படலாம். தனித்தனியாக இப்போது எதிர்க்கட்சிகள் இயங்குகின்றன. ஆயினும், அவை அனைத்தும் ஒரே இலக்கில் பயணிப்பதனால் அவற்றை ஒருங்கிணைப்பது சாத்தியமானது. புதிய கட்சியை ஸ்தாபிப்பதற்கு முன்னர் இன்னும் பல விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். புதிய கட்சியின் தலைவராக நான் பதவி வகிக்கப்போவது இல்லை. அதில் எனது சிறிய அளவிலான பங்களிப்பே இருக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய கட்சியை தோற்றுவிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: பஷில்