Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாதுகாப்பு தேவைகளுக்கு அவசியமானவை என்று கருதப்படும் காணிகள் தவிர வடக்கில் இராணுவத்தின் கட்டப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்படும் என்று சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய அலுவல்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

காணி அமைச்சில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கில் மக்கள் வசித்துவந்த இடங்களில் இருந்து கடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகள் காரணமாக அவர்கள் அந்த இடங்களைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு காணி உறுதி இருந்தால் அந்த காணிகள் நிச்சயமாக வழங்கப்படும். அவர்கள் இருந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்தப்படுவார்கள்.

கடந்த காலங்களில் பல்வேறு வகைகளில் காணிப்பத்திரங்கள் பல பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எந்தவொரு பத்திரத்திலும் காணி உரித்து உறுதியான பத்திரமாக ஒன்றுமில்லை. இதனால் இந்த காணிகளை பிள்ளைகளுக்கு எழுதவோ வியாபாரத்துக்கு பாவிக்கவோ அல்லது மேல் மாடிகளை கட்டவோ முடியாது.

இதனால், இது தொடர்பாக ஆராய்வதற்கு பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளார். இந்த குழு காணி தொடர்பான சட்டமூலத்தின் வரைபை தயாரித்து வருகின்றது. எதிர்வரும் மே அல்லது ஜூன் மாதமளவில் சட்டவரைபு முன்வைக்கப்படும். அப்போது அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொள்ளமுடியும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் மீளளிக்கப்படும்: ஜோன் அமரதுங்க

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com