Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வகையில் மனங்களுக்கு இடையில் பாலம் அமைக்கும் முனைப்பினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கான பாலங்களை அமைத்தார்கள். ஆனால், இந்த அரசாங்கத்தினால், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான மனரீதியான பாலத்தினை அமைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம்.

தேசியக் கட்சி என்கிற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது, தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இம்முறை, 65ஆம் ஆண்டு கட்சிக் கொண்டாட்டங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்து, பல ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to மனங்களுக்கு இடையில் பாலம் அமைக்கின்றோம்: அங்கஜன் இராமநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com