Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வளர்ச்சிக்கான மாற்று இந்தியாவை உருவாக்க முழுமையான உருவாக்கம் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைப்பெற்ற நிதி ஆயோக் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மோடி, 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாடு தனித்து நின்று தன்னிறைவு பெற்றது என்றும், இன்றோ, நாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்துமே உலக தரத்துக்கு இணையாக முன்னேற முனைந்து வருகிறது என்பதால், புத்தக்ங்கள் படிப்பது என்பது அறிவை வளர்த்தாலும் கூட்டாக இணைந்து ஆலோசித்து செயல்படும்போது அது இன்னமும் உருவாக்கம் பெற்று மிளிரும் என்று கூறியுள்ள நரேந்திர மோடி, கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவித்து பேசி உள்ளார். 

நாட்டின் மாற்றத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்பட படிப்படியான உருவாக்கம் என்பது உதவாது என்றும், முழுமையான உருவாக்கம் அவசியம் என்றும் கூறியுள்ளார். எனவேதான் படிப்படியான மாற்றம் என்பதை விடுத்து விரைவான மாற்றம் என்பதை தமது அரசு செயல்படுத்தி வருவதாக மோடி பேசினார்.வளர்ச்சிக்கான பாதையை நோக்கி விரைந்து செல்ல இளைஞர்கள் அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் மோடி தமது உரையில் கூறியுள்ளார்.

0 Responses to வளர்ச்சிக்கான மாற்று இந்தியாவை உருவாக்க முழுமையான உருவாக்கம் அவசியம்: மோடி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com