Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று தான் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இடையில் தமிழ் மக்களுக்கான ஆக்கபூர்வ தீர்வொன்று இந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்கிவைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு தேசிய தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில், இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இரா.சம்பந்தன், “நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடே இத்தகைய தேசிய பண்டிகையாகும். இதனை நல்லுள்ளத்துடன் வரவேற்கின்றேன். தற்போதைய நல்லாட்சியில் எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது. அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்: சம்பந்தன் நம்பிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com