Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹிலாரி கிளிங்டன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது  அரசாங்கத்துக்கு சொந்தமான ஈ மெயில்களை தனியார் சேர்வர்கள் மூலம் அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இது குறித்து விசாரித்திருந்த FBI இது தொடர்பில் ஹிலாரி மீது வழக்குப்  பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தது.

ஆனால் அண்மையிலோ குறித்த ஈ மெயில் விவகாரத்தில் ஹிலாரிக்கு எதிராக மேலும் புதிய தகவல்களை வெளியிடப் போவதாக FBI தெரிவித்துள்ளது. இதனால்  சிக்கலில் தவித்துள்ள ஹிலாரி கிளிங்டன் சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது FBI எந்தத் தகவலாக இருந்த போதும் அதை மக்கள் முன் தெரியப் படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தில் டிரம்ப் தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பி வருவதாகவும் சாடினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஈ மெயில் சர்ச்சை ஹிலாரிக்கு சற்று பின்னடவை ஏற்படுத்தலாம் எனக் கருதப் படுகின்றது. தற்போதைய சூழலில் ஹிலாரி 47% வீதமும் டிரம்ப் 45% வீதமும் மக்கள் ஆதரவுடன் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது. டிரம்ப் சற்று முன்னேறி இருப்பது ஹிலாரி தரப்பை அதிர்ச்சியடையச் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈ மெயில் சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ள ஹிலாரி கிளிங்டன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com