Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஞாயிற்றுக்கிழமை சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற ரஷ்யாவின் இராணுவ விமானம் கருங்கடலில் வீழ்ந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 92 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. மாஸ்கோவில் இருந்து சிரியாவின் லட்டாக்கியா நகரை நோக்கிப் பயணித்த TU-154 ரக குறித்த விமானத்தில் ரஷ்ய துருப்புக்களை மகிழ்விக்கவென இசைக்குழுவினர், ஊடகத்துறையினர் என 84  பேரும் விமானிகள் சிப்பந்திகள் என 8 பேரும் என மொத்தம் 92 பேர் பணித்திருந்தனர்.

புறப்பட்டு சில மணி நேரங்களில் கருங்கடலில் விபத்தில் சிக்கிய குறித்த விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் சடலங்களைத் தேடும் பணியில் 39 கப்பல்கள், 5 ஹெலிகாப்டர்கள், ஒரு டிரோன், மேலும் 100 இற்கும் அதிகமான முத்துக் குளிப்பவர்கள் என்போர் ஈடுபட்டு வருகின்றனர். இதை விட கடலோரப் பகுதிகளில் கருப்புப் பெட்டியைத் தேடும் பணியில் பல ரஷ்ய துருப்புக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பயணித்த அனைவரும் இறந்திருக்கவே வாய்ப்புள்ளது என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் இந்த விபத்துக்கு தீவிரவாதத் தாக்குதலோ அல்லது மோசமான வானிலையோ காரணம் இல்லை எனவும் விமானத்தின் தொழிநுட்பக் கோளாறு அல்லது விமானியின் தவறு தான் காரணமாக இருக்கும் எனவும் கருப்புப் பெட்டி கிடைத்தால் மாத்திரமே உறுதி செய்ய முடியும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. விபத்துக்கான முறையான விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளதுடன் இன்று திங்கட்கிழமை  26 ஆம் திகதி இந்த விபத்தில் பலியானவர்களுக்கு  அஞ்சலி செலுத்துவதற்கான தேசிய துக்க தினமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to கருங்கடலில் வீழ்ந்த ரஷ்ய விமானம்! : 92 பேரும் பலி!: கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தீவிரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com