Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியா நோக்கிச் சென்ற போது அண்மையில் கருங்கடலில் 92 பேருடன் விபத்தில் சிக்கிய ரஷ்ய இராணுவ விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி மிகத் தீவிரமான தேடுதலை அடுத்துக் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாஸ்கோ நேரப்படி இன்று அதிகாலை 5.42 மணிக்கு சோக்கி கடற்கரையில் இருந்து 1600  மீட்டர் தூரத்தில் 17 மீட்டர் ஆழத்தில் இக் கருப்புப் பெட்டி மீட்கப் பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காகக் குறித்த கருப்புப் பெட்டி மாஸ்கோவில்  உள்ள நிபுணர்களிடம் கொண்டு செல்லப் படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நத்தார் தினத்தன்று  ரஷ்யாவின் இந்த TU-154 ரக விமானம்  60 இற்கும் மேற்பட்ட சர்வதேச சிவப்பு இராணுவ கொயிர் இசைக் குழுவினருடன் சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவத் தளம் நோக்கிப் புறப்படுகையில் ரிசோர்ட் நகரான சோக்கி இன் கடற்கரைக்கு அண்மையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப் பட்டிருக்கலாம் என அறிவிக்கப் பட்டது.

விபத்துக்கான காரணம் இனிமேல் தான் தெரிய வரவுள்ள நிலையில் இதன் பின்னணியில் தீவிரவாதச் செயல் இருக்கலாம் எனக் கருதுவதற்கில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மீட்புப் பணியில் 192 முத்துக் குளிப்பவர்கள், 45 கப்பல்கள், 12 விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் 15  ஆழ்கடல் ஆய்வு உபகரணங்கள் என்பன ஈடுபடுத்தப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com