மத்திய இத்தாலிக்கு அண்மையில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களினால் தலைநகர் ரோம் மற்றும் பிளாரன்ஸ் ஆகியவற்றில் பலத்த அதிர்வு உணரப்பட்டது. இப்பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டு மக்கள் அப்புறப் படுத்தப் பட்டனர்.
பள்ளிகள் உடனடியாக நிறுத்தப் பட்டு மாணவர்கள் பெற்றோருடன் அனுப்பி வைக்கப் பட்டனர். மத்திய இத்தாலியின் அப்ருஷ்ஷோ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உள்ளே பலர் சிக்கிப் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இத்தாலி ஊடகங்களின் தகவல் படி பெஸ்கரா மாகாணத்தில் ஃபரிண்டோலா நகரின் கிரான் சஸ்ஸோ மலைப் பகுதியில் உள்ள ஸ்கீ ஹோட்டலான ரிஜோ பியானோவே புதன்கிழமை காலை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக சேதமடைந்ததாகவும் உள்ளே இருந்தவர்களில் பலர் இறந்திருக்கலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
புதன்கிழமை காலை முதலாவது நிலநடுக்கம் தாக்கிய பொழுதில் ஹோட்டலின் உள்ளே 20 விருந்தினர்களும் 7 சேவையாளர்களும் இருந்ததாகவும் ஆனால் 38 பேர் வரை காணாமற் போயுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது. ஸ்நோ மாபைல் உபகரணம் மூலம் 8 பேர் வரை இடம் மாற்ற முடியும் என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 2 மீட்டர் உயரத்துக்குப் பெய்துள்ள கடும் பனி மூட்டத்தால் 9 கிலோ மீட்டர் தொலைவில் அம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப் பட்டுள்ளன. இந்த ஹோட்டலில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த கிராமமான மொண்டேரியாலே இல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தாக்கியிருந்த பூகம்பத்தில் கிட்டத்தட்ட 300 பேர் வரை கொல்லப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மத்திய இத்தாலியை அடுத்தடுத்துத் தாக்கிய 3 நிலநடுக்கங்கள் - பனிச் சரிவுள் சுற்றுலா விடுதி: பலர் பலி