ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்களைத் தொடர்ந்து பல்வேறு தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் இன்று மாபெரும் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் இன்று அறிவிக்கப்படாத பந்த் அனுசரிக்கப்படுகிறது.
பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது. தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவித்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் விதித்த தடையை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அலங்காநல்லூரில் 4வது நாளாகவும், சென்னையிலும் காரைக்குடியில் 3வது நாளாகவும் இரவு பகலாக கடும் குளிரிலும் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் விடிய விடிய போராட்டம் நடந்து வருகின்றன. ஜல்லிக்கட்டுக்கு நாளுக்கு, நாள் ஆதரவு பெருகி வருகிறது.

0 Responses to ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று அறிவிக்கப்படாத பந்த்!