வடகிழக்கு நைஜீரியாவில் போக்கோ ஹராம் போராளிகளைக் குறி வைத்து அந்நாட்டு இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் அகதிகள் முகாமில் இருந்த 52 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இத்தகவலை மெடிசின் சான்ஸ் மனித உரிமைகள் அமைப்பு உறுதிப் படுத்தியுள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதைவிட செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் ஒருவர் இதில் மரணமடைந்தும் 13 பேர் காயம் அடைந்தும் கூட உள்ளதாகவும் கூடத் தெரிய வருகின்றது. 2010 ஆம் ஆண்டு முதல் போக்கோ ஹராம் போராளிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 15 000 பேர் கொல்லப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் 17 மாணவர்களைப் பலி கொண்டிருந்த நைஜீரியப் பல்கலைக் கழகத் தாக்குதலுக்கும் போக்கோ ஹராம் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நைஜீரிய இராணுவத்தின் வான் வழித்தாக்குதலில் 52 பேர் பலி